தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு; டெல்லியில் 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை + "||" + No Covid death in Delhi for 7th consecutive day, 38 new cases in 24 hours

கொரோனா பாதிப்பு; டெல்லியில் 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை

கொரோனா பாதிப்பு; டெல்லியில் 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை
டெல்லி மக்களுக்கு மேலும் ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
புதுடெல்லி,

டெல்லியில்  கொரோன வைரஸ் பரவல் கணிசமாக குறைந்துள்ளது. தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களிலேயே பல வாரங்களாக உள்ளது. டெல்லி மக்களுக்கு  மேலும் ஆறுதல்  அளிக்கும் வகையில் அங்கு தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 

டெல்லியில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: டெல்லியில் மேலும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 15 பேர் குணம் அடைந்துள்ளனர். 

புதிதாக உயிரிழப்பு இல்லை.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,38,288 - ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14,12,805- ஆக அதிகரித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மேலும் 25 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.
3. சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.
4. 'எனக்கும் கொரோனா' இருமிக்கொண்டே வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை
தடுப்பூசி போட மாட்டேன் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்புவதாகவும் அது தன்னை மீட்க உதவும் என்றும் நடிகை கூறி உள்ளார்.
5. மக்களே எச்சரிக்கை..! கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு..! - நிதி ஆயோக்
கொரோனா அழிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், பல நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதைக் காண முடிகிறது.