‘பிட் இந்தியா’ வினாடி-வினா போட்டி: 2 லட்சம் மாணவர்களுக்கு இலவச பதிவு


‘பிட் இந்தியா’ வினாடி-வினா போட்டி: 2 லட்சம் மாணவர்களுக்கு இலவச பதிவு
x
தினத்தந்தி 14 Sep 2021 6:53 PM GMT (Updated: 14 Sep 2021 6:53 PM GMT)

பள்ளி மாணவர்கள் இடையே உடல் தகுதி மற்றும் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக, பிரதமரின் தொலைநோக்கு திட்டமான ‘பிட் இந்தியா’ திட்டத்தின் கீழ் ‘பிட் இந்தியா வினாடி-வினா போட்டி’ கடந்த 1-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

நாட்டின் பழமையான விளையாட்டுகள், சிறந்த வீரர்கள், புகழ்பெற்ற போட்டிகள் போன்ற விளையாட்டு தொடர்பான பல விஷயங்களை மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.3¼ கோடி ஆகும். போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.225 ஆகும். ஆனால் முன்னுரிமை அடிப்படையில் நாடு முழுவதும் 1 லட்சம் பள்ளிகளின் தலா 2 மாணவர்களுக்கு இலவச பதிவு என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பின்படி ‘பிட் இந்தியா குவிஸ்’ தளத்தில் பதிவு நடைபெற்று வருகிறது.

Next Story