மத்திய நிதிமந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடக்கம்


மத்திய நிதிமந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 17 Sep 2021 7:16 AM GMT (Updated: 17 Sep 2021 7:16 AM GMT)

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

லக்னோ, 

நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017- ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. 

இதற்கிடையில், ஜி.எஸ்.டி. நடைமுறை அமலுக்கு வந்தது முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதிமந்திரி தலைமையில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில அரசுகளின் நிதி மந்திரிகள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.

இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல்,டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது, 11 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு கொடுக்கப்பட்டும் வரிச்சலுகையை மேலும் நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story