தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை + "||" + Delhi reports 41 new #COVID19 cases, 44 recoveries and zero deaths in the last 24 hours

கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை

கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 44-பேர் குணம் அடைந்துள்ளனர். சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இன்று தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 404- ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 68,624 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 469- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  14 லட்சத்து 12 ஆயிரத்து 980- ஆக உள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28,085- ஆக உயர்ந்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 337 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணி
லகிம்பூர் வன்முறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணியாக சென்றனர்.
3. கிரெடிட் கார்டு மோசடி; 90 ஆயிரம் பறிப்பு - 5 பேர் கைது
வங்கியில் பணியாற்றும் கஸ்டமர் கேர் பணியாளர்கள் போல் நடித்து பணம் பறித்த குற்றத்திற்காக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. கர்நாடகாவில் மேலும் 373- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் மேலும் 1,303 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.