தேசிய செய்திகள்

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 80.85 கோடி + "||" + The number of corona vaccines paid for in India is 80.85 crore.

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 80.85 கோடி

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 80.85 கோடி
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 81 கோடியை நெருங்கியுள்ளது.புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து காத்து கொள்வதற்காக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.85 கோடியாக உள்ளது என தெரிவித்து உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 0.95 சதவீதம் என்ற அளவில் உள்ளது.  இது கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சில் பதிவான எண்ணிக்கையை விட குறைவாகும்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.  மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,478,419 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 43,938 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,15,105 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது கடந்த 183 நாட்களில் மிக குறைவாகும்.  நாட்டில் இதுவரை 55.36 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 103.48 கோடி
நாட்டில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 103.48 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
2. பாகிஸ்தானில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 10 கோடி
பாகிஸ்தானில் கடந்த 9 மாதங்களில் 10 கோடி கொரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.
3. மெகா முகாம்; தமிழகத்தில் செலுத்திய மொத்த தடுப்பூசி 1.32 கோடி
தமிழகத்தில் 6 நாட்கள் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் 1.32 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவ துறை தெரிவித்து உள்ளது.
4. இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி 102.10 கோடி
இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102.10 கோடி ஆகும்.
5. தமிழகத்தில் 2-ம் தவணை தடுப்பூசி போடுகிறவர்கள் எண்ணிக்கை குறைவு
தமிழகத்தில் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.