தேசிய செய்திகள்

ஜனாதிபதியுடன் குஜராத் முதல் மந்திரி சந்திப்பு + "||" + Gujarat CM Bhupendra Patel called on President Ram Nath Kovind today: Rashtrapati Bhavan

ஜனாதிபதியுடன் குஜராத் முதல் மந்திரி சந்திப்பு

ஜனாதிபதியுடன் குஜராத் முதல் மந்திரி சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி,

ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல் மந்திரி  பூபேந்திர படேல் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். குஜராத் மாநில முதல் மந்திரியாக  இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் செப்டம்பர் 13ஆம் தேதி புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் பதவியேறுக்கொண்டார். 

இந்நிலையில், பதவியேற்ற பின் முதல்முறையாக டெல்லி சென்றுள்ள குஜராத் முதல் மந்திரி இன்று காலை   ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சந்தித்தார். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்களையும் பூபேந்திர படேல் சந்திக்கவுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கர்நாடகம் வந்தார்
3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கர்நாடகம் வந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
2. ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம்: ஜனாதிபதி, மோடி உள்பட தலைவர்கள் இரங்கல்
ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் எளிமையான அரசியல்வாதி என புகழஞ்சலி சூட்டியுள்ளனர்.
3. மாணவர்கள் தற்கொலையை தடுக்க ‘நீட்’ மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
4. தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் ஜனாதிபதி உத்தரவு
தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
5. மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்
மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.