மேற்குவங்காள பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தர் நியமனம்


மேற்குவங்காள பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தர் நியமனம்
x
தினத்தந்தி 20 Sep 2021 3:52 PM GMT (Updated: 20 Sep 2021 3:52 PM GMT)

மேற்குவங்காள பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அம்மாநிலத்தின் பாஜக தலைவராக உள்ள திலீப் கோஷ் பா.ஜ.க. தேசிய துணைப்பொதுச்செயலாளராக நியனம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்குவங்காள சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க.வை சேர்ந்த 1 எம்.பி. 4 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளனர். மேலும், சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க-வில் இணையலாம் என எதிர்பாக்கப்பட்டு வரும் நிலையில் மேற்குவங்காள பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க. தலைவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Next Story