தேசிய செய்திகள்

2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்ற தாய் + "||" + Mother kills 2-year-old child in Chhattisgarh

2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்ற தாய்

2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்ற தாய்
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள கோர்பா மாவட்டத்தில் ஒரு பெண் தனது இரண்டு வயது குழந்தையை வீட்டின் தரையில் அடித்து கொன்றுள்ளார்

சத்திஸ்கர்.

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள கோர்பா மாவட்டத்தில் ஒரு பெண் தனது இரண்டு வயது குழந்தையை வீட்டின் தரையில் அடித்து கொன்றுள்ளார்.
                             
 தனது குழந்தையின் பசிக்காக அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கவேண்டி  இருப்பதால் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது குழந்தை என்றும் பாராமல் வீட்டின் தரையோடு சேர்த்து பலமாக அடித்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த குழந்தை  மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தனது குழந்தையை கொலை செய்த அந்த பெண், மனநலம் பாதிக்கப்பட்டதும், கடந்த 2014 முதல் உளவியல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் தெரிந்தது. மேலும் அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.