புடவையில் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பா..? -ஓட்டல் நிர்வாகம் விளக்கம்


புடவையில் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பா..? -ஓட்டல் நிர்வாகம் விளக்கம்
x
தினத்தந்தி 23 Sep 2021 7:26 AM GMT (Updated: 23 Sep 2021 7:26 AM GMT)

மேனேஜரை அறைந்து விட்டு, புடவையில் வந்ததால் அனுமதி மறுப்பு என கூறிய பத்திரிகையாளரின் குட்டை உடைத்த ஓட்டல் நிர்வாகம்

புதுடெல்லி

டெல்லி பத்திரிகையாளரான அனிதா சவுத்ரி, டெல்லியில் ஆடம்பர ஓட்டல் ஒன்றிற்கு சென்றபோது, புடவை அணிந்திருந்த காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். இதுபோன்ற அவமரியாதையை எங்கும் சந்தித்ததில்லை என்றும் இது மிகுந்த வேதனை யை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து, ஊழியரிடம் அவர் பேசும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து ஓட்டல்  நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவின. ஆனால் உணவு விடுதி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.

இந்நிலையில், அந்த ஓட்டல் நிர்வாகம் விளக்கம் ஒன்றையும் அது தொடர்பான வீடியோவையும் இப்போது வெளியிட்டுள்ளது. அதில், அந்த கெஸ்ட் (அனிதா சவுத்ரி) ஓட்டலுக்கு  வந்தபோது, முன்பே நீங்கள் இருக்கையை பதிவு செய்யவில்லை. கொஞ்சம் காத்திருங்கள் என்று அமைதியாகச் சொன்னோம். பிறகு அவரை எங்கு அமர வைப்பது என்று ஊழியர்கள் ஆலோசித்தார்கள்.

ஆனால் அதற்குள் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்த அந்த கெஸ்ட், எங்கள் ஊழியர்களுடன் சண்டை போட ஆரம்பித்தார். அதோடு மட்டுமில்லாமல் எங்கள் மேனேஜரையும் அவர் அறைந்தார்’ என்று தெரிவித்துள்ளது. அவர் மானேஜரை அறையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Next Story