தேசிய செய்திகள்

குஜராத்: நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து;5 பேர் பலி + "||" + Gujarat: 5 killed as car rams into truck in Morbi

குஜராத்: நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து;5 பேர் பலி

குஜராத்: நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து;5 பேர் பலி
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
அகமதாபாத்.

 குஜராத் மாநிலம் மாலியாவிலிருந்து மோர்பி நகரை நோக்கி 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.  மோர்பி-மாலியா நெடுஞ்சாலையில் கார் வந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறமாக பயங்கரமாக மோதியது. இதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   

இந்த சம்பவம் குறித்து மோர்பி தாலுகா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும், அகமதாபாத்திலிருந்து 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள மோர்பியில்  வியாபாரம் செய்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.