தேசிய செய்திகள்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து + "||" + Exciting, satisfying career in public service awaits you: PM Modi to successful UPSC candidates

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் மற்றும் ஐ.ஆர்.டி.எஸ் உள்ளிட்ட  பல்வேறு மத்திய குடிமைப் பணியிடங்களுக்கான யூ.பி.எஸ்.சி.தேர்வானது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

2020 அக் டோபர் மாதம் நடைபெற்ற யூ.பி.எஸ்.சி.தேர்வு  இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. இதில்  761 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 545 ஆண்கள் மற்றும் 216 பெண்கள் அடங்குவர்
   
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தினார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியதாவது;-

முக்கியமான காலகட்டத்தில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க இருக்கும் உங்களுக்கு  உற்சாகமான மற்றும் திருப்திகரமான பொது சேவை காத்திருக்கிறது.

யூ.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு  நான் சொல்ல விரும்புவது, நீங்கள் மிகவும் திறமையான நபர்கள். இன்னும் பல முயற்சிகள் காத்திருக்கின்றன.

அதே நேரத்தில் இந்தியா பல்வேறு வாய்ப்புகளைக் கொடுக்க இருக்கிறது. மனம் தளரவேண்டாம்” என்று அவர் கூறினார்.

யூ.பி.எஸ்.சி  தேர்வில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபாம் குமார் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜாக்ரதி அவஸ்தி முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.