தேசிய செய்திகள்

மனைவி தற்கொலை செய்து கொள்வதை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர் கைது + "||" + Man shoots video of wife taking extreme step

மனைவி தற்கொலை செய்து கொள்வதை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர் கைது

மனைவி தற்கொலை செய்து கொள்வதை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர் கைது
இளகிய மனம் படைத்தோரும், குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் காணக் கூடாது என்ற வகையில் இருக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஐதராபாத்: 

ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டம் அட்மகூர் நகரில், 38 வயதாகும் பெஞ்சலைய்யா, ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி கொண்டம்மாவின் (31) நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வது வந்தார்.

சில நாள்களுக்கு முன்பு, இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கொண்டம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். ஆனால், அவரைத் தடுக்காத பெஞ்சலைய்யா அதனை  வீடியோவாக எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், தான் தற்கொலை செய்து கொள்ள முயலும் போது, தனது கணவர் நிச்சயம் தடுத்து நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அந்த பெண்ணின் கண்களில் தெரிகிறது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. தூக்கில் தொங்கி துடிதுடித்துக் கொண்டிருக்கும் போதும், பெஞ்சலைய்யா வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

பிறகு, அந்த வீடியோவை மனைவியின் சகோதரருக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்ததும், பெண்ணின் பெற்றோர் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க, பெஞ்சலைய்யா கைது செய்யப்பட்டார்.

இளகிய மனம் படைத்தோரும், குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் காணக் கூடாது என்ற வகையில் இருக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதற்கிடையில், மாநில மகளிர் ஆணையத் தலைவர் வாசிரெட்டி பத்மா தாயை இழந்து தந்தையும் சிறைக்குசென்றதால்  இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை மாநில அரசுஏற்று கொள்ளும் என உறுதி அளித்துள்ளார்.