இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Sep 2021 5:42 AM GMT (Updated: 27 Sep 2021 5:42 AM GMT)

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நேரடியாக நடைபெற உள்ளது.

புதுடெல்லி, 

தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று அறிவித்த காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை நிர்ணயித்தது. அதன்படி நீர் வழங்கும் தவணை காலம் ஜூன் மாதம் துவங்கியது. இருந்தபோதும், கர்நாடக அரசு முறைப்படி நீரை வழங்கவில்லை. இன்னும் 28.7 டி.எம்.சி. நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. தமிழக அரசு இதுகுறித்து, முறையிடப்பட்டபோது, மழை வந்தால் தருவதாகக் கர்நாடக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்தசூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது அடுத்த கூட்டத்தை கடந்த 24-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தநிலையில் இன்று ( 27-ந் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஓராண்டாகக் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்து வந்தநிலையில், இன்று அந்தக் கூட்டம் நேரடியாக நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். 

Next Story