நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது அவசியம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்


நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது அவசியம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
x
தினத்தந்தி 7 Oct 2021 10:29 PM GMT (Updated: 7 Oct 2021 10:29 PM GMT)

நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது அவசியம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

பெங்களூரு,

இது குறித்து பெங்களூரு சாம்ராஜ்நகரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

தற்சார்பு கொள்கையில் நாம் வெற்றியடைய நாட்டில் உள்ள தொழில்நுட்பமும், மனிதவளமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாட்டில், சுகாதார சேவைகளை கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இது அவசியம். இந்த ஆஸ்பத்திரி அமைந்துள்ள சூழ்நிலையை பார்க்கும்போது இது சற்று வனப்பகுதி அருகே அமைந்திருப்பது தெரியவருகிறது. 

இங்கு எஸ்.சி., எஸ்.டி. மக்கள் அதிகம் வாழ்ந்து வருகிறார்கள் என்று அறிந்தேன். அவர்களுக்கான மருத்துவ, சுகாதார சேவைகளை இந்த மருத்துவக்கல்லூரி நிர்வாகமும், மாநில அரசும் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும். இது நாட்டில் உள்ள மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த முக்கிய திருப்பமாக இருக்கும்.

இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

Next Story