நாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கிய தடுப்பூசிகள் 97 கோடி


நாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கிய தடுப்பூசிகள் 97 கோடி
x
தினத்தந்தி 12 Oct 2021 7:07 AM GMT (Updated: 2021-10-12T12:37:38+05:30)

நாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97 கோடியே 24 ஆயிரத்து 165 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதுதவிர, 8 கோடியே 22 லட்சத்து 69 ஆயிரத்து 545 தடுப்பூசிகள் கையிருப்பில் வைத்து உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story