மனித உரிமை பிரச்சினையை சிலர் தேர்ந்தெடுத்து அணுகுகின்றனர் ; பிரதமர் மோடி விமர்சனம்


மனித உரிமை பிரச்சினையை சிலர் தேர்ந்தெடுத்து அணுகுகின்றனர் ; பிரதமர் மோடி விமர்சனம்
x
தினத்தந்தி 12 Oct 2021 10:10 AM GMT (Updated: 12 Oct 2021 10:10 AM GMT)

குடிமக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28-வது நிறுவன தின நிகழ்ச்சி இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். பிரதமர் மோடி பேசியதாவது;- 

மனித உரிமை பிரச்சினைகளை சிலர் சில விஷயங்களில் மட்டுமே பார்க்கின்றனர். பிற விஷயங்களில் பார்ப்பதில்லை. அரசியல் கண்ணாடிகளை கொண்டு அணுகப்படும் போது மனித உரிமை விவகாரம் மீறப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நடத்தை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. 

அவர்கள், பாரபட்ச நடைமுறையில் மனித உரிமை நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பெயரை கெடுக்க விரும்புகின்றனர். அரசியல் லாப நஷ்டங்களுக்காக பார்க்கும்போது, மனித உரிமையுடன் ஜனநாயகமும் பாதிக்கப்படுகிறது” என்றார். 

Next Story