தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 24 பேருக்கு கொரோனா + "||" + City records 34 news Covid-19 cases, no casualties

டெல்லியில் மேலும் 24 பேருக்கு கொரோனா

டெல்லியில் மேலும் 24 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 61,094 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.06 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. மேலும் 38 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

 டெல்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,252 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,13,798 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். பலி எண்ணிக்கை 25,089 ஆக உள்ளது.