டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணி


டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணி
x
தினத்தந்தி 13 Oct 2021 2:53 PM GMT (Updated: 13 Oct 2021 2:53 PM GMT)

லகிம்பூர் வன்முறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணியாக சென்றனர்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் மற்றும் அதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள் 2 பாஜகவினர் உட்பட 8 பேர் இறந்தனர்.

விவசாயிகள் மீதுமோதிய காரில் மத்திய உள்துறைஇணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர். சம்பவம் நடந்தபோது காரில் தனது மகன் ஆசிஷ் மிஸ்ரா இல்லை என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறினார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா மீது உத்தர பிரதேச போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  ஆஷிஷ் மிஸ்ரவை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, அஜய் மிஸ்ராவை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ்  கட்சி வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில், லகிம்பூர் வன்முறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணியாக சென்றனர். 

Next Story