தேர்தல் நெருங்கும்போது மட்டுமே ராமரை வழிபட செல்வார்கள்; கெஜ்ரிவாலை சாடிய நக்வி


தேர்தல் நெருங்கும்போது மட்டுமே ராமரை வழிபட செல்வார்கள்; கெஜ்ரிவாலை சாடிய நக்வி
x
தினத்தந்தி 23 Oct 2021 6:23 PM GMT (Updated: 23 Oct 2021 6:23 PM GMT)

தேர்தல் நெருங்கும்போது மட்டுமே ராமரை வழிபட கெஜ்ரிவால் போன்றோர் விரும்புகிறார்கள் என மத்திய மந்திரி நக்வி கூறியுள்ளார்.




புதுடெல்லி,


உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நிலையில், வருகிற 26ந்தேதி டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் உத்தர பிரதேசத்தின் அயோத்தியா நகருக்கு வருகை தருகிறார் என டெல்லி முதல் மந்திரி அலுவலகம் இன்று தெரிவித்து உள்ளது.  ராம் லல்லா தர்சனில் கலந்து கொள்வதற்காக அயோத்தியா வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய சிறுபான்மையோர் விவகார மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, தேர்தல் வரும்போது, கடவுள் ராமரை வழிபட மக்கள் விரும்புகிறார்கள்.  சிலர் ராமர் கோவிலுக்கு செல்வார்கள்.  சிலர் வேறு கோவில்களுக்கு செல்வார்கள்.

இதுபோன்றோருக்கு வாக்காளர்களும் ஆசி வழங்குவதில்லை.  கடவுளும் ஆசி வழங்குவதில்லை என கூறியுள்ளார்.




Next Story