தேசிய செய்திகள்

100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி கூறினார் - ஓவைசி + "||" + PM Modi ji says that 100 crore people got COVID vaccination says AIMIM president Asaduddin Owaisi

100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி கூறினார் - ஓவைசி

100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி கூறினார் - ஓவைசி
இந்தியாவில் 100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று ஓவைசி கூறியுள்ளார்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள கித்தோர் என்ற பகுதியில் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.  

இதில், எஐஎம்ஐஎம் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்றார். 

அப்போது அவர் பேசியதாவது, 100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவில் இதுவரை 31% மக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் தலீத் மக்களை தொடர்ந்து இஸ்லாமியர்கள் மிகப்பெரிய அநீதியை சந்திக்கின்றனர். முன்பு போலவே பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வந்து உங்களிடம் வாக்குகள் கேட்பார்கள், அவர்கள் உங்கள் அனுதாபிகளாக மாறுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் - ஓவைசி விமர்சனம்
பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் என்று அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.
2. சிஏஏ-வை திரும்பப்பெறவில்லை என்றால் உ.பி. தெருக்களை ‘ஷாகின் பாக்’ களமாக மாற்றுவோம் - ஓவைசி
சிஏஏ சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறவில்லை என்றால் உத்தரபிரதேசத்தில் உள்ள தெருக்கள் ‘ஷாகின் பாக்’ போராட்டக்களமாக மாற்றுவோம் என ஓவைசி தெரிவித்துள்ளார்.
3. பாஜகவுக்கு எதிராக கூட்டணி வைப்பீர்களா? - 'நான் ஜோதிடன் அல்ல’ என பதிலளித்த ஓவைசி
2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு ’நான் ஜோதிடம் அல்ல’ என்று அசாதுதீன் ஓவைசி பதில் அளித்துள்ளார்.
4. காந்தியை நீக்கி விட்டு சாவர்க்கரை தேசத்தந்தையாக மாற்றிவிடுவார்கள் - ஓவைசி விமர்சனம்
சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்க செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.