தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு + "||" + First Zika virus outbreak in Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு

உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு
உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

கான்பூர்,


உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் பணியாற்றி வரும் இந்திய விமான படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றி தலைமை மருத்துவ அதிகாரி நேபாள் சிங் என்பவர் கூறும்போது, உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்கள் 10 குழுக்களை நியமித்தோம்.  அவரது குடியிருப்பு மற்றும் பணியிட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

வீடு, வீடாக சென்று சர்வே, தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட விசயங்களை மேற்கொண்டுள்ளோம்.  அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 22 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.  அதில் அறிகுறிகள் தென்பட்டு உள்ளன.  அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பொது போக்குவரத்து பாதிப்பு; கலெக்டரை கடிந்து கொண்ட முதல்-மந்திரி
ஆம்புலன்ஸ் உள்பட வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதற்காக கலெக்டரை அசாம் முதல்-மந்திரி கடிந்து கொண்டார்.
2. அர்ஜென்டினாவில் உச்சம் அடைந்த கொரோனா; 1,39,853 பேருக்கு பாதிப்பு
அர்ஜென்டினாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,39,853 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. ஜெர்மனியில் கொரோனா புதிய உச்சம்; 81,417 பேருக்கு பாதிப்பு
ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
4. தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா உறுதி
தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
5. கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை குஷ்பு
நடிகையும் பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.