குவாலியரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு - மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு


குவாலியரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு - மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 26 Oct 2021 5:21 PM GMT (Updated: 26 Oct 2021 5:21 PM GMT)

மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குவாலியர்,

இந்தியாவில் ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட 11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதில், மத்திய பிரதேசத்தில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் முயற்சிகளுக்கு மத்தியிலும் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் மாவட்டத்தில் சில மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து குவாலியர் மாவட்ட டாக்டர் மணீஷ் சர்மா கூறுகையில், "குவாலியர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால இதுவரை 1,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 சதவீதம் பேர் குழந்தைகள் என கூறினார்.

மருத்துவமனை பொறுப்பாளர் டாக்டர் அலோக் புரோஹித் கூறியதாவது:-

மருத்துவமனையில் உள்ள அனைத்து படுக்கைகளையும் பயன்படுத்தி உள்ளோம். ஒரு வார்டில் பதிமூன்று படுக்கைகள் உள்ளன. குழந்தை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளை ஒன்றாக வைத்துள்ளோம். குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வாந்தி, வயிற்றுப்போக்கு, குளிர் கைகள் மற்றும் கால்களில் ஏதேனும் புகார் இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story