ஆந்திராவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு இல்லை - மாநில அரசு முடிவு


ஆந்திராவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு இல்லை - மாநில அரசு முடிவு
x
தினத்தந்தி 5 Nov 2021 8:55 PM GMT (Updated: 5 Nov 2021 8:55 PM GMT)

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு குறைப்பு இல்லை என மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அமராவதி,

நாடு முழுவதும் பெட்ேரால், டீசல் விலையை குறைக்கும் நோக்கில் அதன் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அந்தவகையில் பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.10-ம் குறைத்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்த விலை குறைப்பு நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதை பின்பற்றி மாநிலங்களும் பெட்ரோல்-டீசல் மீது விதித்துள்ள வாட் வரியை குறைக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது. இதை ஏற்று பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்து வருகின்றன. ஆனால் ஆந்திராவில் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி குறைப்பு இல்லை என மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் நாங்கள் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் வாட் வரியில் எந்த குறைப்பையும் நாங்கள் ஏற்படுத்துவது சாத்தியமில்லை. ஏனெனில் எங்களின் ஆபத்தான நிதி நிலை அதை அனுமதிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

Next Story