திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
x
தினத்தந்தி 8 Nov 2021 3:24 AM GMT (Updated: 8 Nov 2021 3:24 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வெளிமாநில பக்தர்களுக்கும் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் மண்டல கவுன்சில் கூட்டம் திருப்பதியில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது. அதில் அனைத்துத் தென் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரி மற்றும் மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஆகையால் 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story