தேசிய செய்திகள்

உணவில் மயக்க மருந்து கொடுத்து காதலனின் உறுப்பை துண்டித்த யோகா ஆசிரியை + "||" + Jaipur: Yoga instructor chops off private parts of male friend

உணவில் மயக்க மருந்து கொடுத்து காதலனின் உறுப்பை துண்டித்த யோகா ஆசிரியை

உணவில் மயக்க மருந்து கொடுத்து காதலனின் உறுப்பை துண்டித்த யோகா ஆசிரியை
யோகா ஆசிரியை தன்னுடைய உறுப்பை வெட்டி கொலை செய்ய முயன்றதாக வாலிபர் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூரைச் சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு 35 வயதான யோகா ஆசிரியை அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஒரே துறையில் பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். அந்தப்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாகியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நவம்பர் 16-ம் தேதி அந்தப்பெண் இளைஞரை போனில் அழைத்துள்ளார். காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  வீட்டில் இரவு உணவு உண்டுவிட்டு செல்லலாம் எனக் கூறியுள்ளார். சாப்பிட்டு விட்டு இரவு புறப்படும்போது நானும் உன்னுடன் வரட்டுமா எனக் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்க இருவரும் ஒன்றாக இளைஞரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

வீட்டிற்கு சென்றதும் வாலிபருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. நன்கு தூங்கி விட்டார். நள்ளிரவில் இடுப்பு பகுதிக்கு கீழ் வலி ஏற்பட்டுள்ளது. தூக்க கலக்கத்தில் கண் விழித்து பார்த்தபோது அவரது படுக்கை முழுவதும் ரத்தக்கறையாக இருந்துள்ளது. நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்துள்ளது. பின்னர் தான் தன்னுடைய பிறப்புறுப்பு அறுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னுடன் இருந்த பெண்ணை தேடியுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். ஆனால் யாரும் உதவி செய்ய இல்லை. 

இதனையடுத்து போனை எடுத்து அந்தப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். போனை எடுத்த பெண் என்னை மன்னித்துவிடு  எனக் கூறியுள்ளார். பிறகு தான் தன்னுடைய நிலைக்கு இந்தப்பெண் தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு வந்த அந்தப்பெண் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த நபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அதன்பின்னரே போலீஸ் நிலையம்  சென்று புகார் அளித்துள்ளார். புகாரைப்பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 தலைமறைவாக உள்ள அந்தப்பெண்ணை தேடி வருகின்றனர். போலீசாரின்  முதற்கட்ட விசாரணையில், இளைஞரும் அந்தப்பெண்ணும் மிகவும் நெருக்கமாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்துக்கொள்ள அந்தப்பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதற்கு இளைஞர் மறுக்கவே அந்தப்பெண் இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உணவில் மயக்க மருந்து கலந்துக்கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இளைஞருக்கு வீட்டில் நடந்தது எதுவும் நினைவில் இல்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்காதலியின் கணவரை பார்த்து பயந்து 5 வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் பலி
கள்ளக்காதலியின் கணவரை பார்த்து பயந்து 5 வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2. கள்ளக்காதலியுடன் காரில் சென்ற தந்தையை வழிமறித்து தாக்கிய மகள்கள்
ராஜஸ்தானில் இரண்டு சிறுமிகள் தங்கள் தந்தையை நடுரோட்டில் வைத்து தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3. பாம்பை ஏவி மாமியார் கொலை; மருமகள்- காதலனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் மறுப்பு
ராஜஸ்தானில் பாம்புக் கடியால் உயிரிழப்பது இயல்பான ஒன்று, ஆண்டுதோறும் ஏராளமானோர் பாம்புக் கடியால் உயிரிழக்கிறார்கள்