தேசிய செய்திகள்

காதல் பரிசாக மனைவிக்காக வீட்டையே தாஜ்மஹாலாக கட்டிய கணவர்! + "||" + MP man gifts Taj Mahal-like home to wife, replica took three years to build

காதல் பரிசாக மனைவிக்காக வீட்டையே தாஜ்மஹாலாக கட்டிய கணவர்!

காதல் பரிசாக மனைவிக்காக வீட்டையே தாஜ்மஹாலாக கட்டிய கணவர்!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்காக தாஜ்மஹாலை போன்று வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்.
போபால்,

தாஜ்மஹால் ஒரு காலத்தில் தபதி ஆற்றின் கரையில் கட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது ஆனால் பின்னர் அது ஆக்ராவில் கட்டப்பட்டது என்பது வரலாறு. எனவே மத்திய பிரதேசத்தில் தாஜ்மஹால் போலவே ஒரு வீட்டை தன் மனைவிக்காக கட்டியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது.  இந்த அழகான வீட்டை கட்டிய ஆனந்த் பிரகாஷ் சோக்சே அதனை தனது மனைவி மஞ்சுஷா சோக்சேவுக்கு பரிசாக அளித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த் சோக்சே என்பவர் தனது மனைவிக்கு தாஜ்மஹாலை போன்று வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார். ஷாஜகான் கட்ட தவறியதை தான் கட்டியுள்ளதாகவும் பெருமை பேசுகிறார். 

அதாவது புர்கான்பூரில் உள்ள தப்தி ஆற்றின் கரையில் தாஜ்மஹாலை கட்ட ஷாஜகான் திட்டமிட்டதாகவும், ஆனால் பல காரணங்களால் ஆக்ராவில் கட்டப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுவதை சுட்டிக்காட்டும் அவர், தன் மனைவிக்கு புர்கான் பூரில் தாஜ்மஹாலை கட்டி ஷாஜகான் கட்ட தவறியதை தான் கட்டியுள்ளதாகவும் பெருமை பட கூறுகிறார். இது கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார்.