பா.ஜ.க.வை தோற்கடிக்க கூடிய ஒரே தலைவர் மம்தா பானர்ஜி; முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேச்சு


பா.ஜ.க.வை தோற்கடிக்க கூடிய ஒரே தலைவர் மம்தா பானர்ஜி; முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 23 Nov 2021 1:45 PM GMT (Updated: 23 Nov 2021 1:45 PM GMT)

பா.ஜ.க.வை தோற்கடிக்க கூடிய ஒரே ஒரு தலைவர் மம்தா பானர்ஜி என திரிணாமுல் காங்கிரசில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.


கொல்கத்தா,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான அசோக் தன்வார் திரிணாமுல் காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார்.  இதன்பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இன்று பா.ஜ.க.வை தோற்கடிக்க கூடிய ஒரே ஒரு தலைவர் இருக்கிறார்.  அவர் மம்தா பானர்ஜி.

வங்காளத்தில் பா.ஜ.க.வை தோற்கடித்துள்ளார்.  விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசை பணிய செய்ததுபோல், வருகிற 2024ம் ஆண்டில் பா.ஜ.க.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய தேவை உள்ளது என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story