மராட்டியத்தில் மேலும் 766- பேருக்கு கொரோனா தொற்று


மராட்டியத்தில் மேலும் 766- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 23 Nov 2021 4:31 PM GMT (Updated: 23 Nov 2021 4:31 PM GMT)

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 66,31,297- ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 766- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால்  ஒரே நாளில் 19- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3-வது நாளாக 10 ஆயிரத்திற்கும் கீழாக உள்ளது. 

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 66,31,297- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,40,766-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 929- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 64,77,379- ஆக அதிகரித்துள்ளது. 

Next Story