தேசிய செய்திகள்

கனமழை பாதிப்பு: நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் - பிரதமருக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் + "||" + Andhra floods: Jagan seeks Rs 1000 cr interim relief from Union govt

கனமழை பாதிப்பு: நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் - பிரதமருக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

கனமழை பாதிப்பு: நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் - பிரதமருக்கு  ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்
ஆந்திர பிரதேசத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதி உள்ளார்.
ஐதரபாத்,

ஆந்திரா முழுவதும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்க வேண்டும் என முதல்-மந்திரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில்,  கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்பக் கோரியும், இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்க கோரியும் ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும்  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.