தேசிய செய்திகள்

பரிசோதனையின் போது ஆபாசம் காட்டி வீடியோ எடுத்து டாக்டரை மிரட்டிய பெண் கைது + "||" + Showing pornography during the experiment Take video Woman arrested for threatening doctor

பரிசோதனையின் போது ஆபாசம் காட்டி வீடியோ எடுத்து டாக்டரை மிரட்டிய பெண் கைது

பரிசோதனையின் போது ஆபாசம் காட்டி வீடியோ எடுத்து டாக்டரை மிரட்டிய பெண் கைது
டாக்டரிடம் பெண்ணை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,

மும்பை சார்கோப்பில் உள்ள செக்டார் 3ல் கிளினிக் வைத்திருப்பவர் டாக்டர் சுதிர் ஷெட்டி. இவர், ஒரு கும்பல் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், 2 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததாகவும் போலீசாரிடம் புகார் அளித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட  கும்பலில் உள்ள  ஒரு பெண்  கடந்த நவம்பர் 8 ஆம் தேதி டாக்டரை அணுகி, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறினார். அப்போது டாக்டரிடம் உடலை ஆபாசமாக காட்டி பரிசோதனை செய்ய சொன்னார். அப்போது அந்தப் பெண்ணின் கூட்டாளிகள் மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த பெண், டாக்டரிடம் ரூ.2.5 லட்சம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

கடந்த நவம்பர் 19ஆம் தேதி, அமித் மானே, தீபக் மானே மற்றும் மனோஜ் நாயுடு என்ற மூன்று பேரும் மற்றொரு பெண்ணும் ஷெட்டி கிளினிக்கிற்குள் நுழைந்து அவரை அடித்து துன்புறுத்தினர். அத்துடன் டாக்டரை தாக்கிவிட்டு ரூ.2 லட்சத்தை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர். பின்னர் டாக்டர் போலீசில் புகார் அளித்து உள்ளார். 

இதை தொடர்ந்து போலீசார் இரண்டு பெண்கள் உள்பட 5 பேரை  மும்பை சார்கோப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.