வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது ஏன்? - சரத் பவார் கருத்து

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது ஏன்?  - சரத் பவார் கருத்து
x
தினத்தந்தி 24 Nov 2021 3:45 PM GMT (Updated: 24 Nov 2021 4:42 PM GMT)

உத்தரப் பிரதேச தேர்தல் மட்டும் இல்லாவிட்டால் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றிருக்கப்படாது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

உத்தரப் பிரதேச தேர்தல் மட்டும் இல்லாவிட்டால் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றிருக்கப்படாது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வருகிறது. இன்னும் சில மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறது. எங்களுக்குக் கிடைத்தத் தகவலின்படி, தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்குப் பாஜகவினர் செல்லும் போது அதுவும் குறிப்பாக கிராமப்பகுதிகளில் அவர்களுக்கு சரியான வரவேற்பு இல்லை. வாக்கு கேட்டு செல்லும் போது இதே நிலைதான் இருக்கும் என்பதை பாஜகவினர் உணர்ந்து விட்டனர். இந்தப் பின்னணியில் தான் வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். 

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த நில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்றார். 

Next Story