தேசிய செய்திகள்

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் நுழைவு வாயில் - பிரதமர் மோடி + "||" + Noida International Airport will serve as the logistic gateway of North India: PM Narendra Modi after laying foundation stone of the airport

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் நுழைவு வாயில் - பிரதமர் மோடி

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் நுழைவு வாயில்  - பிரதமர் மோடி
நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் விமானங்களின் தளவாட நுழைவாயிலாக செயல்படும் என பிரதமர் மோடி கூறினார்.
நொய்டா,

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இதன் மூலம் இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவாகிறது.

புதிதாக அமையவுள்ள நொய்டா விமான நிலையம் டெல்லி தலைநகர் அருகே  இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும்.  இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும். இதன் அமைவிடம் காரணமாக டெல்லி, நொய்டா, காசியாபாத், அலிகார், ஆக்ரா, ஃபாரிதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கு பயன்படும். 

இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப்பணி ரூ.10,050 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 1300-க்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பில் முடிக்கப்பட உள்ள முதலாவது கட்ட விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 1.2 கோடி பயனாளிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது 2024 வாக்கில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி பேசியதாவது:-

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் தளவாட நுழைவாயிலாக செயல்படும்.  நொய்டா சர்வதேச விமான நிலையம்  விமானங்களை பழுதுபார்க்கும் மிகப்பெரிய மையமாக இருக்கும்.

விமானத்தின் பராமரிப்பு பணிகள் இங்கு மேற்கொள்ளப்படும்.  இங்குள்ள 40 ஏக்கர் நிலப்பரப்பில் விமானங்கள் பழுது மற்றும் மறுசீரமைப்பு செய்யப்படும் போது இங்கு உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜாண் டி ரோட்ஸ் - கிறிஸ் கெயிலுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறிய பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர்கள் ஜாண் டி ரோட்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
2. குடியரசு தின விழாவில் வித்தியாச 'கெட்டப்'பில் வந்த பிரதமர் மோடி
நாட்டின் 73-வது குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநில பாரம்பரிய தொப்பி மற்றும் மணிப்பூர் மாநில துண்டுடன் வந்து அனைவரையும் அசத்தினார்.
3. முப்பரிமாண ஒளிவடிவிலான நேதாஜி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
4. நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!
நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
5. இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை - பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-க்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.