தேசிய செய்திகள்

உறுப்பு தானம் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு + "||" + Nearly 5 lakh people die a year due to organ scarcity

உறுப்பு தானம் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு

உறுப்பு தானம் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு
அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய உடல் உறுப்பு தான தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல டாக்டர் மனோஜ் குமார் சாஹு கலந்து கொண்டு இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறைந்து வருவது குறித்து பேசினார்.

அப்போது அவர் “அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “ 1.5 லட்சம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் தேவை என்ற நிலையில், நாட்டில் ஆண்டுக்கு 5,000 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை நடக்கிறது. அதே போல் சுமார் 2 லட்சம் பேர் கல்லீரல் தானம் கிடைக்காததால் இறக்கின்றனர்” என்றார்.

மேலும் இந்தியாவில் உடல் உறுப்பு தான விகிதம் 0.01 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. எரிபொருள் வாங்க இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி
பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
3. லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் - இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள்
இரு நாட்டு எல்லையான லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்
13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
5. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்: விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது.