தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்தது + "||" + Kerala covid 19 report on Nov 29

கேரளாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்தது

கேரளாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்தது
தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 44,638- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,382- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 5,779- பேர் நேற்று குணம் அடைந்த நிலையில், இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து  51 ஆயிரத்து 998- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்து 487 ஆக குறைந்துள்ளது.

தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 44,638- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  கொரோனா பாதிப்பால் திங்கள் கிழமை மட்டும் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,955- ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 666- பேரும், திருவனந்தபுரத்தில் 527- பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 477- பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை - பினராயி விஜயன் தகவல்
கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2. கோவாவில் அதிகரிக்கும் கொரோனா; இன்று 3,936 பேருக்கு தொற்று உறுதி
கோவாவில் இன்று ஒரே நாளில் 3,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆந்திராவில் இன்று மேலும் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
4. கேரளாவில் புதிதாக 34,199 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,199 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இளைஞர் கடத்திக்கொலை - உடல் போலீஸ் நிலையம் முன் வீச்சு... பரபரப்பு தகவல்...!
கடத்தப்பட்ட இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டு உடல் போலீஸ் நிலையம் முன் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.