ஆந்திர பிரதேச முதல்-மந்திரி தலைமையில் கொரோனா ஆய்வு கூட்டம்; அறிவுறுத்தல் வெளியீடு


ஆந்திர பிரதேச முதல்-மந்திரி தலைமையில் கொரோனா ஆய்வு கூட்டம்; அறிவுறுத்தல் வெளியீடு
x
தினத்தந்தி 29 Nov 2021 6:35 PM GMT (Updated: 29 Nov 2021 6:35 PM GMT)

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சுகாதார துறையினருடன் இன்று ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

அமராவதி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் சூழலில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய கொரோனா பாதிப்புகள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன.  இதனை முன்னிட்டு மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, ஒமிக்ரான் பாதிப்புகள் பற்றி சுகாதார துறையினருடன் இன்று ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.  இதில் சுகாதார மற்றும் குடும்பநல மந்திரி ஏ.கே. ஸ்ரீனிவாஸ் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிப்பது, சர்வதேச விமான நிலையத்தில் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளை நடத்துவது, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் 7 நாட்கள் தனிமைக்கு அனுப்பி வைப்பது அல்லது அவர்களுடைய இடங்களிலேயே தனிமைப்படுத்தி கொள்வது உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்கும்படி அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


Next Story