தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் 5 ஆயிரம் ஆசிரியர்கள் + "||" + 5,000 teachers refuse to be vaccinated against corona in Kerala

கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் 5 ஆயிரம் ஆசிரியர்கள்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் 5 ஆயிரம் ஆசிரியர்கள்
கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களும், 20 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி கூறுகையில், ‘தடுப்பூசி போட மறுக்கும் ஆசிரியர்களால் மாணவர் நலன் பாதிக்கப்படும். சில ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் பள்ளிக்கு வருகிறார்கள். இதனை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இதனால் 47 லட்சம் மாணவர்கள், மக்களின் நலன் கேள்விக்குறியாகி உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டு வரும் நிலையில் மதத்தை காரணம் காட்டி தடுப்பூசி போட ஆசிரியர்கள் சிலர் மறுப்பது ஏற்கத்தக்கதல்ல’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 49 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
2. கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் - சுகாதார துறை மந்திரி
கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்று சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
3. கேரளாவில் 50 ஆயிரத்தை தாண்டிய இன்றைய கொரோனா பாதிப்பு
இன்றைய கேரளாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது
4. கேரள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை வழக்கில் சம்பத்தபட்ட முக்கிய குற்றவாளியான எஸ்.டி.பி.ஐ நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
5. கேரளாவில் புதிதாக 26,514 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் தற்போது 2,60,271 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.