டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா


டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Dec 2021 4:25 PM GMT (Updated: 3 Dec 2021 4:25 PM GMT)

டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.09 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் இல்லை. டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,41,244- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14.15 - லட்சமாக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  25,098- ஆக நீடிக்கிறது. டெல்லியில் கடந்த மாதம் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். கடந்த 3 மாதங்களில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவேயாகும்.  அக்டோபர் மாதம் 4 பேரும் செப்டம்பரில் 5 பேரும் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.  


Next Story