ஒமைக்ரான் பாதிப்பு; பூஸ்டர் டோஸ் போடுவது பற்றி மன்சுக் மாண்டவியா பதில் + "||" + Booster dose; Conclusion on the advice of a panel of experts: Manzuk Mandavia Answer
ஒமைக்ரான் பாதிப்பு; பூஸ்டர் டோஸ் போடுவது பற்றி மன்சுக் மாண்டவியா பதில்
பூஸ்டர் டோஸ் போடுவது பற்றி அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் என மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் இந்த பாதிப்புகள் நாட்டில் உச்சம் எட்ட தொடங்கின.
ஒரு கட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 லட்சம் என்ற அளவில் பதிவாகி அச்சம் ஏற்படுத்தியது. இதேபோன்று உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன. இதன்பின் நாட்டில் பாதிப்புகள் குறைய தொடங்கின.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா மக்களவையில் பேசும்போது, இந்தியாவில் இதுவரை 3.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
4.6 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 1.36% ஆகும். இந்தியாவின் மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் 25 ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் மற்றும் 340 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இது உலக ஒப்பீட்டு அளவில் மிக குறைவாகும் என தெரிவித்து உள்ளார்.
அவர் மக்களவையில் 12 மணிநேரத்திற்கும் கூடுதலாக பதிலளித்து உள்ளார். நேற்று நள்ளிரவு வரையிலும் அவரது பேச்சு அமைந்திருந்தது. எதிர்க்கட்சி தரப்பில் எதிர்ப்பு குரல்களும் எழுந்தன.
புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் பற்றி அவர் பேசும்போது, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ்கள் போடுவது ஆகியவை அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
வன விலங்குகள் இடையூறுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.