டெங்கு பாதிப்பு; டெல்லியில் 15 பேர் பலி


டெங்கு பாதிப்பு; டெல்லியில் 15 பேர் பலி
x
தினத்தந்தி 6 Dec 2021 5:18 PM IST (Updated: 6 Dec 2021 5:18 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் பருவமழை காலத்தில் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  நடப்பு ஆண்டில் 8,975 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

டெல்லியில் டெங்கு பாதிப்புக்கு முதன்முறையாக கடந்த அக்டோபர் மாதம் 18ந்தேதி ஒருவர் பலியானார்.  இதனால், சுகாதார பணிகளை தீவிரப்படுத்த அரசு நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது.  டெல்லியில் டெங்குவுக்கு இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர் என டெல்லி அரசு தகவல் தெரிவிக்கின்றது.


Next Story