கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 வது நாளாக 91 ஆயிரமாக சரிவு
இந்தியாவில் 561 நாளில் முதல் முறையாக கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 91ஆயிரமாக சரிவு அடைந்துள்ளது.
புதுடெல்லி,
உலகமே உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவலால் அதிர்ந்து போயிருக்கும் தருணம் இது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இறுதிக்கட்ட பயணத்தில் இருக்கிறது. இந்த தொற்று பரவல் தற்போது எல்லா வகையிலும் கட்டுக்குள் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த நோய்த்தொற்றில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சரிந்து கொண்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7,350 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,46,90,510 லிருந்து 3,46,97,860 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் கொரோனாவுக்கு 202 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,75,434 லிருந்து 4,75,636 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 91,456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 7,973 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3.41,22,765 லிருந்து 3,41,30,768 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.37% உயிரிழப்பு விகிதம் 1.37% ஆக உள்ளது.
Related Tags :
Next Story