சர்ச்சைக்குரிய கேள்வி: சிபிஎஸ்இ- க்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்


சர்ச்சைக்குரிய கேள்வி: சிபிஎஸ்இ- க்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 13 Dec 2021 7:41 PM IST (Updated: 13 Dec 2021 7:51 PM IST)
t-max-icont-min-icon

சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மார்க் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் ஆங்கிலத் தேர்வில் சிறுகுறிப்பில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு விடையளிப்பது போன்று இருந்தது. அதில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் பாலின பாடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பின. 

இந்த சூழலில் 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மார்க் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. எனினும், இவ்விவகாரத்த்தில் மத்திய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய இடை நிலைக்கல்வி வாரியமான சிபிஎஸ்இ-க்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


Next Story