கங்கனா ரனாவத்தை ஜன.25-வரை கைது செய்ய மாட்டோம்: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்
தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி கங்கனா ரனாவத் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
மும்பை,
நடிகை கங்கனா ரனாவத் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதையடுத்து அவர் மீது சீக்கிய அமைப்பினர் மும்பை போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து மும்பை கார் போலீசார் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி கங்கனா ரனாவத் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் வரை கங்கனா ரனாவத்தை கைது செய்ய மாட்டோம் எனக்கூறினர். இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரைணைய அடுத்த மாதம் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story