மது அருந்துவதற்கான வயது 25 லிருந்து 21 ஆக குறைப்பு...! எங்கு தெரியுமா...?
மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயதை 25 லிருந்து 21 ஆக குறைத்து அரியானா அரசு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியுள்ளது.
சண்டிகர்,
அரியானா மாநிலத்தில் மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு, மற்றும் விற்பதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதை 25 லிருந்து 21 ஆக குறைத்து அரியானா அரசு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இந்தியாவின் பிற மாநிலங்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் விற்பதற்கு குறைந்த வயது வரம்புகளை நிர்ணயம் செய்திருப்பதால் அரியானாவிலும் குறைத்திருப்பதாக அரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அரியானா கலால் திருத்த மசோதா, 2021, அரியானா கலால் சட்டம், 1914-இன் 27, 29, 30 மற்றும் 62 பிரிவுகளில் மாற்றங்களுடன் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மக்கள் இப்போது கல்வியறிவு பெற்றவர்களாகவும் குடிப்பழக்கம் குறித்த பகுத்தறிவு கொண்டவர்களாகவும் இருப்பதாக இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திருத்த மசோதா மூலம் மது அருந்துதல், அதை வாங்குதல் அல்லது விற்பனை செய்வதற்கான குறைந்தபட்ச வயதை 25 லிருந்து 21 ஆண்டுகளாக அரியானா அரசு குறைத்துள்ளது.
சமீபத்தில் தலைநகர் டெல்லியிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் விற்பதற்கான வயது வரம்பு 21 ஆக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story