பூஸ்டர் டோஸாக எந்த தடுப்பூசி போடப்படும்- மத்திய அரசு விளக்கம்


பூஸ்டர் டோஸாக எந்த தடுப்பூசி போடப்படும்-  மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 5 Jan 2022 4:18 PM GMT (Updated: 5 Jan 2022 4:18 PM GMT)

இந்தியாவில் வரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதற்கிடையே,  இந்தியாவில் வரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் நோய்வாய்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போடப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

இந்நிலையில், முதல் இரண்டு தவணையில் எந்த நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டதோ? அதே நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ்தான் தற்போது செலுத்தப்படும் என கோவிட் தடுப்பு குழுவின் தலைவர் வி. கே. பால் தெரிவித்துள்ளார்.


Next Story