வெறுப்புணர்வை தூண்டுபவர்களுக்கு உங்களது அமைதி தைரியம் அளிக்கிறது: பிரதமருக்கு ஐஐஎம் மாணவர்கள் கடிதம்


வெறுப்புணர்வை தூண்டுபவர்களுக்கு உங்களது அமைதி தைரியம் அளிக்கிறது: பிரதமருக்கு ஐஐஎம் மாணவர்கள் கடிதம்
x
தினத்தந்தி 8 Jan 2022 10:21 AM GMT (Updated: 8 Jan 2022 10:21 AM GMT)

சமீபத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முஸ்லீம்களுக்கு எதிராக இந்து மத தலைவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

புதுடெல்லி,

வெறுப்புணர்வை தூண்டுபவர்களுக்கு உங்களது அமைதி தைரியம் அளிக்கிறது என்று பிரதமர் மோடிக்கு ஐஐஎம் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.  ஐஐஎம் (அகமதாபாத்), ஐஐஎம் (பெங்களூரு) ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பேராசிரியர்கள் என 183 பேர் கையொப்பம் இட்டு எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மதம் மற்றும் சாதி ரீதியிலான வெறுப்பு பேச்சுகளையும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவதையும் ஏற்று கொள்ள முடியாது.  நமது சொந்தங்களாகிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்கள். அதுவும், எந்தவித பயமும் இல்லாமல், இதுபோன்ற அழைப்புகள் பகிரங்கமாக விடப்படுகின்றன.தேவாலயங்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் உள்நோக்கத்துடன் சேதப்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற விவகாரத்தில் பிரதமர் ஆகிய நீங்கள் கடைப்பிடிக்கும் மவுனம், வெறுப்பு எண்ணம் நிறைந்த குரல்களுக்கு தைரியம் அளிப்பதாக உள்ளது.  எனவே,பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டில் வெறுப்புப் பேச்சு மற்றும் சாதி அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக நீங்கள் பேச வேண்டும். நீங்கள் நாட்டைச் சரியான திசையில் வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறோம், பிரார்த்தனை செய்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முஸ்லீம்களுக்கு எதிராக இந்து மத தலைவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


Next Story