ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்து கொள்ள கூடாது; அரசு எச்சரிக்கை


ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்து கொள்ள கூடாது; அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Jan 2022 12:09 AM GMT (Updated: 13 Jan 2022 12:09 AM GMT)

நாட்டில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்து கொள்ள கூடாது என அரசு எச்சரித்து உள்ளது.



புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக லட்சத்திற்கும் கூடுதலாக பதிவாகி வருகிறது.  இதேபோன்று, ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது.  கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்து கொள்ள கூடது என அரசு எச்சரித்து உள்ளது.

இதுபற்றி நிதிஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே. பால் கூறும்போது, டெல்டாவை விட ஒமைக்ரான் அதிக பரவலை கொண்டுள்ளது.  அதனை சாதாரண ஜலதோஷம் என்ற அளவில் எடுத்து கொள்ள கூடாது.  கொரோனா பாதிப்பும் விரைவாக அதிகரித்து வருகிறது.

இதனால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் விகிதம் குறைவு போல் தோன்றினாலும் பெரிய அளவில் இடம் பிடித்து உள்ளது.  அதனால், பரவலை குறைக்க தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதுடன் மக்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


Next Story