தேசிய செய்திகள்

இந்து மத கடவுள் குறித்து சர்ச்சை கருத்து: யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட் + "||" + Day after quitting as UP cabinet minister, arrest warrant issued against Swami Prasad Maurya

இந்து மத கடவுள் குறித்து சர்ச்சை கருத்து: யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட்

இந்து மத கடவுள் குறித்து சர்ச்சை கருத்து: யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட்
இந்து மத கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பதியப்பட்ட வழக்கில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து அடுத்த நாளே எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் மந்திரியாக இடம்பெற்றிருந்தவர் பாஜக எம்.எல்.ஏ. பிரசாத் மவுரியா. 

இதனிடையே யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிரசாத் மவுரியா தனது மந்திரி பதவியை கடந்த செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இந்த சம்பவம் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து விலகிய பிரசாத் மவுரியாவுக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்து மத கடவுள்களை அவமதித்ததாக பிரசாத் மவுரியா மீது 2014-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் பிரசாத் மவுரியா 12-ம் தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், பிரசாத் மவுரியா நேற்று (ஜன.12) விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால், பிரசாத் மவுரியாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி யோகேஷ் குமார் யாதவ் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேச தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டி - சிவசேனா
உத்தரபிரதேச தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
2. உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் சமாஜ்வாதியில் இணைகிறார்...!
உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவருமான இம்ரான் மசூத் சமாஜ்வாதியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. அடுத்தடுத்து வந்த அரசுகள் இஸ்லாமிய மதத்தினரை புறக்கணித்தன - ஒவைசி
உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து வந்த அரசுகள் இஸ்லாமிய மதத்தினரை புறக்கணித்ததாக அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
4. அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி அரசியல் பிரசாரம் - தலைமை தேர்தல் ஆணையருக்கு காங். கடிதம்
அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும் தலைமை தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
5. கடவுள் கிருஷ்ணர் என் கனவில் தோன்றி நமது கட்சிதான் ஆட்சியமைக்கும் என்றார் - அகிலேஷ்
கடவுள் கிருஷ்ணர் தினமும் என் கனவில் தோன்றி நமது கட்சிதான் ஆட்சியமைக்கும் என்று கூறுகிறார் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.