புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன; பிரதமர் மோடி


புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 Jan 2022 9:02 AM GMT (Updated: 15 Jan 2022 9:02 AM GMT)

பல்வேறு துறைகளை சேர்ந்த 150- ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

புதுடெல்லி,

இந்தியாவில் வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், விண்வெளி, தொழில்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 150- ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.  அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- 

புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கப் போகின்றன. . இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்தவுடன், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களளின் பங்கு முக்கியமானதாக இருக்கும். 

இந்தியாவின் கண்டுபிடிப்பாளர்கள் நமது நாட்டை உலக அளவில் பெருமையடைய வைத்துள்ளனர்.இனி வரும் காலங்களில் ஜனவரி 16 தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படும். இந்த தசாப்தம் இந்தியாவின் தசாப்தமாக மாறியுள்ளது” என்றார். 


Next Story