கேரளாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 528- ஆக உயர்வு


கேரளாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 528- ஆக உயர்வு
x
தினத்தந்தி 15 Jan 2022 10:26 AM GMT (Updated: 15 Jan 2022 10:26 AM GMT)

கேரளாவில் ஒமைக்ரான் இன்று 48 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் இன்று மேலும் 48 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 528- ஆக உயர்ந்துள்ளது. கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் இது பற்றி கூறுகையில்,  

“ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 48 பேரில்  33- பேர் குறைந்த ரிஸ்க் கொண்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள். இருவர் அதிக ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்வர்கள்.   9 பேர் அவர்களின் தொடர்புகள் மூலமாக ஒமைக்ரான் பாதித்தவர்கள் ஆவர். மீதமுள்ள 4 பேர் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

புதிதாக ஒமைக்ரான் கண்டறியப்பட்ட 48-பேரில் 12 பேர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள். 9 பேர் எர்ணாகுளம், 7 பேர் திரிசூர், 6 பேர் திருவனந்தபுரம், 4 பேர் கோட்டயம், 2 பேர் மலப்புரம், கொல்லம், இடுக்கி, ஆலப்புழா, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்த 528- பேரில் 365- பேர் குறைந்த ரிஸ்க் நாடுகளில் இருந்தும் 92-பேர் அதிக ரிஸ்க் நாடுகள் கொண்ட நாடுகளில் இருந்தும் வந்தவர்கள். தொடர்புகள் மூலம் 61 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 பேர் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள்” என்று தெரிவித்தார். 

Next Story