இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு


இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2022 4:02 AM GMT (Updated: 20 Jan 2022 4:02 AM GMT)

இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என வகைகளில் பரவி வந்தது. தற்போது கொரோனா மேலும் உருமாறி ஒமைக்ரான் என்ற பெயரில் உலகை அச்சுறுத்தி வருகிறது. 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 326 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பில் இருந்து 3.63 சதவிகிதம் அதிகமாகும்.

இதனால், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.

Next Story